Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி.எஸ்.டி குறித்து தவறாக பேசினால் கடும் நடவடிக்கை: பிரதமர் எச்சரிக்கை

In இந்தியா
Published: 09:39 GMT, Oct 26, 2017 |
0 Comments
3614
This post was written by : Kemasiya
modi-4

ஜி.எஸ்.டி குறித்து தவறாக விளம்பரம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விழா ஒன்றில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் தெரிவித்த அவர்,

நுகர்வோரை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது இலட்சியம். எனவே அதற்கு முன்னுரிமை கொடுத்து நாங்கள் செயல்படுவோம். நுகர்வோர் பாதுகாப்பிற்கு புதிய சட்டம் இயற்றப்பட்டு வருகின்றது. தவறான விளம்பரங்களை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் ஜி.எஸ்.டி. அமுல்படுத்தப்பட்ட பின்னர், தொழிலில் புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளது. புதிய மறைமுக வரிவிதிப்பு காரணமாக நுகர்வோர் தான் மிகுந்த பயன் அடைவார்கள்.

தற்போது ஜி.எஸ்.டி.யினால் தொழில் நிறவனங்கள் இடையே கடும் வியாபார போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை, விரைவில் குறையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg