Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேசிய பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு: 30 பேர் உயிரிழப்பு

In
Updated: 09:40 GMT, Oct 26, 2017 | Published: 09:40 GMT, Oct 26, 2017 |
0 Comments
1312
This post was written by : Risha

இந்தோனேசியத் தலைநகரின் மேற்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனர்த்தம் இடம்பெற்ற கட்டடத்திலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் பெண்களே இவ்வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்திருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த தொழிற்சாலையில் எத்தனை பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது உறுதியாக தெரியவரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

35இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகிலுள்ள மூன்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்டுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மின்சார கோளாறே இவ்வனர்த்தத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg