Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியலமைப்பை எதிர்த்தால் 13ஐ அமுல்படுத்த நேரிடும்! – ஜே.வி.பி. எச்சரிக்கை

In இலங்கை
Updated: 17:06 GMT, Oct 26, 2017 | Published: 12:04 GMT, Oct 26, 2017 |
0 Comments
2221
icon_com
This post was written by : Varshini
images

இலங்கையின் புதிய அரசியல் யாப்பை எதிர்த்தால், சமஷ்டியின் சகல பண்புகளையும் உள்ளடக்கிய 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமென மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு குறிப்பிட்டார்.

13ஆவது திருத்தமானது நாட்டை பிளவுபடுத்தி மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும் தன்மையுடையதென குறிப்பிட்டுள்ள ரில்வின், இதிலுள்ள பாதகங்களை உணராமல் புதிய அரசியல் யாப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் போக்கு தொடருமாயின், சர்வதேசத்தின் அழுத்தம் தீவிரமடைந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய ஆபத்து ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, இதுவரை காலமும் இல்லாத வகையில் இம்முறை அரசியல் யாப்பை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்துவது சாதகமான விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வதே தமது இலக்கு என்றும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg