Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார இழப்பை தவிர்க்க முற்படுகின்றோம் – ஸ்பெய்ன்

In ஐரோப்பா
Updated: 11:57 GMT, Oct 26, 2017 | Published: 11:57 GMT, Oct 26, 2017 |
0 Comments
1279
icon_com
This post was written by : Risha
Spain

கதலோனியாவை நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் அங்கு பொருளாதார இழப்பை தவிர்க்க முற்படுவதாக ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்ன் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கதலோனியாவின் நெருக்கடியான நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘தற்போது கதலோனியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை காரணமாக அங்கிருந்த பெருமளவான வர்த்தக நிலைய அலுவலகங்கள் கதலோனியாவைவிட்டு வெளியேறியுள்ளன.

இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இடமாறியுள்ளன. இதனால், கதலோனியாவில் பொருளாதார நிலைமை பாதிக்கப்படுவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆகவே, இந்த நிலைமையைக் கவனத்திற்கொண்டு, கதலோனியாவை எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம். கதலோனியாவை எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம் அங்கு பொருளாதார இழப்பை தவிர்க்க முடியும் என்று நம்புகின்றோம்;’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg