Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய இளைஞர் பயிற்சி நிலைய மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு

In இலங்கை
Updated: 12:11 GMT, Oct 26, 2017 | Published: 12:11 GMT, Oct 26, 2017 |
0 Comments
1114
This post was written by : Vithushagan

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் தொழிற் பயிற்சியை கற்று வரும் இளைஞர் யுவதிகள் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து இன்று (வியாழக்கிழமை) காலை பயிற்சி நிலைய வகுப்பிற்குள் செல்லாது வெளியில் நின்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் 278 இளைஞர், யுவதிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களில் 50 இளைஞர்களும் 228 யுவதிகளும் அடங்குகின்றனர்.

குறித்த பயிற்சி நிலையம் இராணுவத்தினரை மையப்படுத்தி அவர்களின் தலைமையில் சகல விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையத்தில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களை கடக்கின்ற போதும் அங்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக இளைஞர், யுவதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆங்கில பயிற்சிகள் இடம் பெற்று வருகின்ற போதும், தகவல் தொழில்நுட்ப பயிற்சி இடம் பெறுவதில்லை. இவ்விடயம் தொடர்பாக பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டால் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை.

எமது பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி பயிற்சி நிலையத்திற்குள் செல்லாது வெளியில் நின்று எதிர்ப்பை வெளியிடுவதாக இளைஞர், யுவதிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி மேஜர் குணதிலக்கவிடம் வினவிய போது,

“தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் குறித்த பயிற்சி நிலையம் செயற்படுகின்றது. இலங்கையில் 52 நிலையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் இடம் பெற்று வருகின்றது.

இராணுவ அதிகாரிகளின் கீழ் குறித்த நிலையங்கள் செயற்படுகின்றது. எமது பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வருகின்ற இளைஞர், யுவதிகள் மத்தியில் ஒழுக்கம், ஆளுமை, தலைமைத்துவம் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

இதில் இளைஞர்களுக்கு உரிய முறையில் தலைமுடி சரி செய்து, முகச்சவரம் செய்து வருமாறு பல தடவை தெரிவித்திருந்தோம்.

இந்த நிலையில் இன்று 20 இளைஞர்கள் உரிய முறையில் முகச்சவரம் செய்யாது வந்தார்கள். அவர்களை சென்று உரிய முறையில் முகச்சவரம் செய்து வருமாறு தெரிவித்தோம்.

அவர்கள் வெளியில் சென்றனர். 5 இளைஞர்கள் உரிய முறையில் முகச்சவரம் செய்து வந்தனர்.ஏனைய 15 பேரும் வெளியில் நின்று பயிற்சி நிலையத்தினுள் இருந்த ஏனைய இளைஞர், யுவதிகளை வெளியில் அழைத்தனர்.

இதுவே பிரச்சினைக்கான காரணம்.எமது கட்டுப்பாடுகளுக்கு அமைந்து செயற்படாத இளைஞர், யுவதிகள் இடை நிறுத்தப்படுவார்கள்.” என அவர் தெரிவித்துள்ளார்.

DSC_0090 DSC_0094 DSC_0122

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg