Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

25 டொலர்களில் கிடைக்கும் அதிஷ்டம்: விஜி தீவில் பங்களா ஒன்று இலவசம்

In கனடா
Updated: 12:21 GMT, Oct 26, 2017 | Published: 12:21 GMT, Oct 26, 2017 |
0 Comments
1334
This post was written by : Anojkiyan

25 டொலர்கள் குலுக்கு சீட்டுடன் விஜி தீவில் நிரந்தரமான பங்களா ஒன்றை சொந்தமாக பெறுவதற்கான அரிய வாய்ப்பு கனேடியர்களுக்கு கிட்டியுள்ளது.

6.4 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான பங்களாக்கள் வெகு விரைவில் கட்டப்பட உள்ளது. அத்துடன் வெற்றி பெறுபவர் குறிப்பிட்ட பங்களாவின் கட்டுமான பணி முடிவடைவதற்கு முன்னர் இரண்டு ஐந்து இரவுகள் அங்கு செல்வதற்கான வசதியும் வழங்கப்படுகின்றது.

இது வரை 300,000 ரிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதே போன்று நான்கு பங்களாக்;கள் குலுக்கல் மூலம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெற்றி பெறுபவர்கள் 27 ஏக்கர் நிலத்திலான தீவில் அமைந்துள்ள தங்குமிடத்திற்கும் செல்லும் அனுமதி பெறுவர்.

வெற்றி பெறுபவர் விருப்ப கட்டமைக்கப்பட்ட உரித்துறுதியான மூன்று படுக்கை அறைகள், நீச்சல் தடாகத்துடனான வீட்டை 12 மாதங்களிற்குள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக கட்டப்படும் பங்களாக்கள் ஒரு இரவிற்கு 1,500 அமெரிக்க டொலர்கள் வாடகைக்கு விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருமானத்தில் சரிபாதி தீவிற்கும், பங்களாக்களின் உரிமையாளர்களிற்கு பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg