Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சரியான தகவல்கள் வழங்கப்படுகின்றனவா?

In இலங்கை
Published: 12:34 GMT, Oct 26, 2017 |
0 Comments
1228
This post was written by : Varshini
RTI

இலங்கையில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் விடயங்கள் குறித்து, பிழையான தகவல்களை அதிகாரிகள் வழங்குவதாக வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய வடக்கு மாகாண சபை அமர்விலிலேயே தவராசா இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறிப்பாக, வடக்கு மாகாண திணைக்கள அதிகாரிகள் தமது சொந்த பாவனைக்காக அரச வாகனங்களை பயன்படுத்துவதாகவும், அது குறித்து தகவல் கோரப்பட்ட போது பிழையான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், வடக்கு மாகாண சபை அமைச்சர்களும் உறுப்பினர்களும் மாகாண சட்டங்களை கற்றுக்கொள்வது அவசியமென குறிப்பிட்ட தவராசா, வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள போதும் இன்றும் நியதிச் சட்டங்கள் உருவாக்கப்படவில்லையென சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ஏனைய மாகாணங்களில் உள்ள நியதிச் சட்டங்களை பெற்று அதனை வடக்கு மாகாணத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg