Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓய்வுபெற்ற கடற்படை தளபதிக்கு அரசு வழங்கிய கௌரவம்!

In இலங்கை
Updated: 13:04 GMT, Oct 26, 2017 | Published: 13:03 GMT, Oct 26, 2017 |
0 Comments
1807
This post was written by : Vithushagan
chinaiya

இலங்கை கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெறும் வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு அட்மிரலாகப்  பதவியுயர்வு வழங்கி, அவரை அரசு கௌரவப்படுத்துயுள்ளது.

நேற்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் கடற்படையில் 35 வருடங்களாக சேவை புரிந்து வந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி இலங்கை கடற்படைத் தளபதியாக பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில், அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவுபெற்றது. இதனையடுத்து அவர் உத்தியோகப்பூர்வமாக இன்று கடற்படையில் இருந்து   ஓய்வு பெற்றார்.

இலங்கை  வரலாற்றில் தமிழர் ஒருவர் கடற்படையின் உயரிய பதவியை வகித்தமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது ஓய்வையடுத்து கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg