Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச உத்தியோகத்தர் மீது தாக்குதல்

In இலங்கை
Published: 15:08 GMT, Oct 26, 2017 |
0 Comments
1230
This post was written by : Vithushagan
03

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் கே.சுகிர்தரன் என்பவர் மூவரால் தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது ,கிண்ணையடி துறையடி வீதியில் மீள்குடியேற்ற வீட்டுத்திட்டத்தில் தாயொருவருக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த தாய் உயிரிழந்ததால் அந்த வீட்டினை உயிரிழந்தவரின் பிள்ளைகள் இருவர் தங்களுக்கு வேண்டுமென தனித்தனியே உரிமை கோரி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) இவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கிராம சேவை அதிகாரியுடன் அபிவிருத்தி உத்தியோகத்தரும் சென்றுள்ளார். இதன்போதே குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த தாயின் மகனும், பேரனும், மற்றுமொரு உறவினருமாக மூன்று பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதில் குறித்த உத்தியோகத்தரின் தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காயமடைந்த உத்தியோகத்தர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg