Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

90 மில்லியன் டொலர்செலவில் தாய் மன்னருக்கு இறுதிவிடை! 70 ஆண்டுகால மன்னரின் உடல் தகனம்

In உலகம்
Updated: 15:58 GMT, Oct 26, 2017 | Published: 15:58 GMT, Oct 26, 2017 |
0 Comments
5254
This post was written by : Sivaguru Siva

பல மில்லியன் மக்கள் பார்த்திருக்க தாய்லாந்து மன்னர் பூமிபோலுக்கு இன்று இறுதிவிடை வழங்கப்பட்டு பெருமதிப்புடன் உடலம் எரியூட்டப்பட்டது

Thailand's King Bhumibol Adulyadej leaves the Siriraj Hospital for a ceremony at the Grand Palace in Bangkok

கடந்த வருடம் ஒக்டோபர் 13 ஆந்திகதி தாய்லாந்து மன்னர் பூமிபோல் அடூன் ய டேட் தனது 88வது வயதில் மரணமடைந்தார்.

ஆயினும் ஏனைய நாடுகளில் இடம்பெறுவதைப்போல ஒரு சில நாட்களில் தாய்லாந்தின் மன்னருக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்படவில்லை

மாறாக கடந்த 12 மாதங்கள் பதப்படுத்தபட்ட அவரது உடலத்துக்கு துக்கம் அனுஷ்டிக்கபட்டது. இறுதியில் பெரும் மதிப்பளிப்புடன் அவரது உடலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சனம் லுஆங் பகுதியில் இன்றிரவு தகனம் செய்யப்பட்டது.

Late-Thai-King-cremation-1108751

கடந்த ஒருவருடகாலமாக அஞ்சலிக்கு வைக்கபட்ட அவரது உடலப்பேழைக்கு 12 மில்லியன் மக்கள் நேரடியாக அஞ்சலி செலுத்தியதாக கணிப்புகள் கூறின.

1946 இல் அப்போது மன்னராக இருந்த தனது சகோதரன் 19 வது வயதில் துப்பாக்கிச்;சூட்டுச்சம்பவம் ஒன்றில் கொல்லப்;பட்ட பின்னர் புதிய மன்னராக அரியணை ஏறியவர் பூமிபோல்.

1782 இல் சியாமில் உருவாகிய சக்ரி பரம்பரையில் ஒன்பதாம் மன்னர் என்பதால்  அதற்குப்பின்னர் 9 ஆம் ராமா மன்னராக பூமிபோல் அழைக்கபட்டார்.

Thai-King-funeral-live-updates-Bhumibol-Adulyadej-cremation-latest-picture-video-1108403

தாய்லாந்தில் சட்டபூர்வமாக அவமதிக்கப்பட முடியாத ஆளுமை முகமான அவர் சகல தாய் மக்களின் தந்தை என்ற வர்ணிப்புக்குரியவர்.

இப்போதைக்கு உலகில் அதிக காலத்துக்கு (70 வருடங்கள்)  முடி தரித்திருந்த மன்னராக மட்டுமல்ல உலகின் அதி செல்வந்த மன்னர் என்ற பதிவும் பூமிபோலுக்குத் தான் உள்ளது.

2010 இல் உலகின் முன்னணி நிதிஇதழ்போர்ப்ஸ் வழங்கிய தரவுகளில் இவரது சொத்துக்களின் மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

2016 இல் மரணிக்கும் வரை 70 ஆண்டுகளாக பூமிபோல் நடத்திய ஆட்சியில் நவ தாய்லாந்து உருவாகிய பெருமையும் இவருக்கு உரியது.

பூமிபோலின் ஆட்சியில் தாய்லாந்தில் 15 இராணுவப்புரட்சிகளும் 16 முறை அரசியலமைப்புச்சட்ட மாற்றங்களும் இடம்பெற்றன.

தாய்லாந்தின் வரலாற்றில் அவ்வப்போது ஆட்சியைப்பிடித்த இராணுவ ஆட்சியாளர்களுக்கு மன்னர் பூமிபோல் ஆதரவு வழங்கியதான விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

எனினும் 1981 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முயற்சிகளை இவரே தடுத்து நிறுத்தியதான மறுபக்க கருத்துக்களும் உள்ளன.

இவையாவும் இப்போது  பழைய பதிவுகள்.

இன்று அவரது தகன நிகழ்வில் புதியதொரு பதிவு உருவாகிவிட்டது.

30 மில்லியன் அமெரிக்க டொலர் செலவீனத்தில் கடந்த பன்னிரண்டு மாதங்களாக நிர்மாணிக்கப்பட்ட இறுதிச்சடங்கு வளாகத்தில் இன்றிரவு அவர் எரியூட்டபபட்டார்.

இறுதிச்சடங்குகளுக்கான மொத்த செலவீனம் 90 மில்லியன் டொலராக கருதப்படுகிறது

skynews-thailand-king-funeral_4136787

மரணித்த மன்னருக்கு பிரியமாக இருந்த  நாய்களின் பெரு உருவ சிலைகள் உட்பட 500 சிலைகள் மற்றும் தடாகங்கள் எரிமேடை வளாகத்துக்கு அண்மையில் அமைக்கபட்டன.

இந்த இறுதிச்சடங்கு மேடை இந்து- பௌத்த உலகின் முக்கிய குறியீடான மேரு மலையை பிரதிபலித்ததாக விளக்கமளிக்கபட்டது.

தாய்லாந்து மன்னர் பரப்பரை தமது மரணத்துக்குப்பின்னர் மேரு மலைக்குத் திரும்புவதான ஜதீகம் உள்ளது.

தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதற்கு மத்தாக பயன்படுத்தப்பட்டதாக கூர்ம புராணத்தில் கூறப்படும் அதே மேருமலைதான் இந்த ஐதீகத்துக்குள் உள்ளது.

5184 (1)

ஒரு மனிதஉடலின் எரியூட்டல் நகர்வுக்கு இவ்வளவு ஆடம்பரமா என யாரும் வினவமுடியாது. ஏனெனில் ஏற்கனவே குறிப்பிட்டது போல சகல தாய்லாந்து மக்களின் தந்தை என்ற முதன்மை மதிப்பு மன்னர் பூமிபோலுக்கு உள்ளது.

இன்றை இறுதிச்சடங்குகளுக்காக தலைநகர் பாங்கொக்கில் சுமார் எண்பதினாயிரம் பாதுகாப்பு படையினர் நிலை நிறுத்தப்பட்டனர்.

பெருவெற்றி ரதத்தில் வைக்கப்பட்டு பூமிபோலின் உடலத்தை 216 பேர் இழுத்துச்சென்றனர்.

Thai-King-funeral-LIVE-pictures-latest-news-King-of-Thailand-Bhumibol-Adulyadej-1108279

அவரது புதல்வனும் தற்போதைய மன்னருமான மஹா வஜ்ரலோங்கோன் இதற்கு தலைமைதாங்கினார்.

Thai-King-funeral-live-updates-Bhumibol-Adulyadej-cremation-latest-picture-video-1108404

இறுதி ஊர்வலங்களில் ஏறக்குறைய மூன்று லட்சம் பேர் கறுத்த ஆடைகளை அணிந்து பாங்கொக்வீதிகளில் இறங்கியிருந்தனர். பலர் துயரத்ததை கட்டுப்படுத்த இயலாமல் வாய்விட்டு அழுதனர்.

Thai-King-funeral-LIVE-pictures-latest-news-King-of-Thailand-Bhumibol-Adulyadej-871309

மாலை 6 மணியளவில் ஆரம்பித்த அரச முறை நிகழ்வுகளில் தாய்லாந்தின் பிரபலமான முகமூடி நடனங்கள் மற்றும் இசைநிகழச்சிகள்  இடம்பெற்ற உலகின் 16 அரச குடும்பபிரதிநிதிகள் உட்பட்ட உலக  அரசியல் பிரபலங்கள்  இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். பிரித்தானியா சார்பாக இளவரசர் அன்ரு பங்கெடுத்தார்.

Thailand-funeral-ceremony-cremation-1108761

இறுதியில் பெரும் மதிப்பு மற்றும் பிரமாண்ட அரண்மனை ஏற்பாடுகளுடன் பூமிபோலின் உடலம் தகனம் செய்யப்பட்டது.

Thai-King-cremation-funeral-1108755

நாளை மன்னரின் அஸ்தி பெரும் மதிப்பளிப்புடன் சனம் லுஆங் கிலிருந்து அரண்மனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

மன்னர் பூமிபோல் தாய்லாந்து அரசியலில் முக்கிய தீர்மானங்களை எடுத்தவர் ஆயினும்  இன்று அவருக்கு வழங்கப்படட்ட இந்த அதியுச்ச இறுதிமதிப்பு தாய்லாந்தின் வரலாற்றில் அவர் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவாக பதிவாகிவிட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg