Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வு!

In இலங்கை
Updated: 16:02 GMT, Oct 26, 2017 | Published: 16:02 GMT, Oct 26, 2017 |
0 Comments
1241
This post was written by : Vithushagan

கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களுக்கான தகவல் தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வும் கண்காட்சியும் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் இந்த நிகழ்வு கனடா உலக பல்கலைகழகம் உட்பட தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

சிறந்த உற்பத்தியை பெறவும் சர்வதேச தரம் வாய்ந்த உற்பத்தியை பெறவும் நவீன தொழில்நுட்பத்தின் தேவையினை கருத்தில்கொண்டு இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுனர் ரோகித போகொல்லாகம கலந்துகொண்டார்.சிறப்பு அதிதியாக கனடா உலக பல்கலைகழகத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி லெஷர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களுகளினை செயற்றிறன் மிக்கதாக மாற்றி அதன் ஊடாக பொருளாதார கட்டமைப்பினையும் தொழில்வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் வகையில் இந்த செயலமர்வும் கண்காட்சியும் நடாத்தப்பட்டது.

இதில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து 500ற்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள்,பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் பல்வேறு வகையான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

DSC07116 DSC07124 DSC07151 DSC07187

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg