Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எல்லை மீறிய பாக் இராணுவம்: காஷ்மீரில் பதற்றம்

In இந்தியா
Updated: 02:38 GMT, Oct 27, 2017 | Published: 02:38 GMT, Oct 27, 2017 |
0 Comments
1165
This post was written by : Kemasiya

போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி, பாகிஸ்தான் இராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீரில் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கெர்னி பகுதியில், நேற்று (வியாழக்கிழமை) மாலை இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அப் பகுதியில் இடம்பெற்றுவரும் கட்டுமாணப் பணிகளை பார்வையிடுவதற்காக, பூஞ்ச் மாவட்ட அதிகாரி ‘அகமது சர்கார்’ தலைமையிலான குழுவினர் அங்கு சென்றிருந்த வேளையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு, இந்திய பாதுகாப்புப்படையும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால், இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg