Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிள்ளையான் உள்ளிட்ட அறுவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

In இலங்கை
Published: 02:45 GMT, Oct 27, 2017 |
0 Comments
1468
icon_com
This post was written by : Varshini

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தன் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இவர்களுக்கெதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தம் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள பிள்ளையான், கடந்த ஒன்றரை வருடங்ளுக்கு மேலாக தன்னை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு கடந்த வருட இறுதிப்பகுதியில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்தே இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கடந்த 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் பிள்ளையான் உள்ளிட்ட 4 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய இருவரை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg