Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புலிகளின் தாக்குதல் ஒத்திகை இடம்பெற்ற இடத்தில் வெடிபொருட்கள்!

In இலங்கை
Published: 03:59 GMT, Oct 27, 2017 |
0 Comments
1767
icon_com
This post was written by : Varshini

கிளிநொச்சி – வட்டகச்சி புழுதியாறு குளத்தில், பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப் படையால் நேற்று (வியாழக்கிழமை) இரவு குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

யுத்தகாலத்தில் அநுராதபுரம் விமானநிலைய தாக்குதலுக்காக, விடுதலைப் புலிகளின் ஒத்திகை இடம்பெற்ற விமான ஓடுபாதைகள் உள்ள இடத்திலேயே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

60 மில்லி மீற்றர் அளவுடைய 10 மோட்டார் செல்கள், 81 மில்லிமீற்றர் அளவுடைய ஒரு மோட்டார் செல் என்பனவே மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் இரணைமடு விமானப் படையினரால் இராமநாதபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் அழிக்கப்பட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg