Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியா மீதான பொருளாதாரத்தடையால் குடிமக்களுக்கு பாதிப்பு

In உலகம்
Published: 04:15 GMT, Oct 27, 2017 |
0 Comments
1159
This post was written by : Suganthini
un

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடையானது, சாதாரண குடிமக்களைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என, ஐ.நா.வின் சிறப்பு விசாரணை அதிகாரி தோமஸ் குயின்டானா (Tomas Quintana) எச்சரித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் மனித உரிமைகள் உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றியபோது, ‘வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்புச்சபையால் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரியாவுக்கு முக்கிய உதவிப் பொருட்களை வழங்குவதில் தடை காணப்படுகின்றது. இதன் காரணமாக குறிப்பாக, கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட ஏனைய குடிமக்களும்  பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்” என்றார்.

அத்துடன், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு  உதவித்திட்டங்களை மேற்கொள்ளும் மனித உரிமைகள் குழுவின் உறுப்பினர்களும் வடகொரியா மீதான பொருளாதாரத்தடையால், தங்கள் பணியை முன்னெடுப்பதில் சிரமத்தை  எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பில் நான் கவனம் செலுத்தியுள்ளேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

‘வடகொரியா மீதான பொருளாதாரத்தடையால், அந்நாட்டிலுள்ள குடிமக்கள் தண்டனையை அனுபவித்துவரும் அதேவேளை, அவர்கள் பேரழிவை எதிர்நோக்கக்கூடிய வாய்ப்புண்டு. எனவே, பொருளாதாரத்தடை நடைமுறைகளை மீண்டும் முழுமையாக மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg