Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடரும் சோகம்! ரி-ருவென்ரி போட்டியிலும் மண் கவ்வியது இலங்கை

In கிாிக்கட்
Updated: 04:37 GMT, Oct 27, 2017 | Published: 04:36 GMT, Oct 27, 2017 |
0 Comments
1316
This post was written by : Sujitharan

இலங்கை அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில் பாகிஸ்தான் அணி மிக இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரில் 1-0 என, முன்னிலை வகிக்கின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரின் முதல்போட்டி நேற்றையதினம் அபுதாபியில் இரவுப் போட்டியாக நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மிகமோசமான துடுப்பாட்ட பிரதியை வெளிப்படுத்தியது.

பல இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணி ரி-ருவென்ரி போட்டியில் சாதிக்கும் என இலங்கை இரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், அந்த எதிர்ப்பார்ப்பும் தவிடுபொடியாகியது.

முதலில் துப்பெடுத்தாடிய இலங்கை அணி சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கட்டுக்களை இழந்தது. இறுதியில் அந்த அணி 18.2 ஓவர்களில் 102 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில், சிக்குகே பிரசன்ன ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் அறிமுக வீரர் சமரவிக்கிரம 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஹசன் அலி 3 விக்கெட்டுக்களையும், ஹபீஸ் மற்றும் உஸ்மான் கான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

103 என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி, 17.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில், மலிக் 42 ஓட்டங்களையும், ஹபீஸ் 25 ஓட்டங்களையும் ஆட்டமிழக்கது பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் விகும் சஞ்சய இரண்டு விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் உஸ்மான் கான் போட்டியின் நாயகனாக தெரிவானார். இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது ரி-ருவென்ரி போட்டி நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg