Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரேஷ்ட ஊடகவியலாளர் வினோத் வர்மா கைது

In இந்தியா
Updated: 04:48 GMT, Oct 27, 2017 | Published: 04:48 GMT, Oct 27, 2017 |
0 Comments
1177
This post was written by : Kemasiya

சதீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர், அம்மாநில அரசுக்கு எதிராக தகவல்களை சேகரித்த  குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட ஊடகவியலாளர் வினோத் வர்மா, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 3.30 மணியளவில் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் இவரின் வீட்டில் இருந்து 300 CD கள் மற்றும் ஒரு பேனா என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் அம் மாநிலத்தின் அமைச்சர் ஒருவரின் குற்றச்செயல்களை தொடர்ந்தும் அவதானித்து வந்ததோடு, அம் மாநில அரசு மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வந்தார் என்பதும், இவர் பி.பி.சி ஊடகத்தின் முன்னாள் பணியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg