Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேசிய தொழிற்சாலையில் வெடிப்பு: உயிரிழந்தோர் 50ஆக அதிகரிப்பு

In உலகம்
Updated: 05:10 GMT, Oct 27, 2017 | Published: 05:10 GMT, Oct 27, 2017 |
0 Comments
1260
This post was written by : Suganthini

இந்தோனேசியத் தலைநகரான ஜகத்ராவுக்கு அருகில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், இந்தச் சம்பவத்தில் 46 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிகலாம் எனவும் வைத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தத் தொழிற்சாலையில் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட வாகனமொன்றிலேயே நேற்று (வியாழக்கிழமை) இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இந்தத் தொழிற்சாலை கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 103 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg