Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய சாதனையை நிலைநாட்டினார் திசார பெரேரா

In கிாிக்கட்
Published: 05:13 GMT, Oct 27, 2017 |
0 Comments
3170
This post was written by : Sujitharan
CRICKET-SRI-PAK

இலங்கை கிரிக்கட் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த போதிலும், அணித்தலைமை விடயத்தில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரின் நேற்றைய முதல் போட்டியின் மூலம், இலங்கை அணி புதிய சாதனையினைப் படைத்துள்ளது.

நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு தலைமைத் தாங்கி அதனை வழிநடத்திய திசார பெரேரா மூலமாகவே, அந்த சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

மத்தியூஸ், ஹேரத், சந்திமால் தரங்க, கப்புகெதர, மாலிங்க ஆகியோரை தொடர்ந்து  திசார பெரேரா இந்த ஆண்டில் இலங்கை அணிக்கு தலைவராக செயற்பட்டுள்ளார்.

நடப்பாண்டில் சகலவிதமான கிரிக்கட் போட்டிகளிலும் இலங்கை அணியை 7 தலைவர்கள் வழிநடத்தியுள்ளார்கள். ஓர் அணியை ஒரே ஆண்டில் அதிக தலைவர்கள் வழிநடத்திய சாதனையையே இலங்கை படைத்துள்ளது.

2011 ம் ஆண்டில் சிம்பாவே மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஆறு தலைவர்கள் தலைமைத் தாங்கியமையே இதுவரையான சாதனையாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg