Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா துறையில் புரட்சி: துபாயை அதிரவைக்கவுள்ள லைக்காவின் 2.O இசை வெளியீடு!

In சினிமா
Updated: 10:50 GMT, Oct 27, 2017 | Published: 05:17 GMT, Oct 27, 2017 |
0 Comments
1774
This post was written by : Surenth

சுபாஸ்கரன் பெருமையுடன் வழங்கும் லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் உருவாகிவரும் 2.O திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று (வெள்ளிக்கிழமை) துபாயில் நடைபெறவுள்ளது.

துபாயிலுள்ள புர்ஜ் பார்க்கில் (Burj park) மிகவும் பிரமாண்டமான முறையில் இவ் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இவ் இசை வெளியிட்டு விழாவில், லைக்கா குழுமத்தின் தலைவர் திரு.அல்லிராஜா சுபாஸ்கரன், 2.O திரைப்படத்தின் கதாநாயகன் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நாயகி எமி ஜாக்ஷன், பொலிவூட் நடிகர் அக்ஷய் குமார், இயக்குநர் சங்கர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். அத்தோடு, பல திரை நட்சத்திரங்கள், பிரமுகர்கள் என ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர். அத்தோடு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்னிசை நேரலையாக இடம்பெறவுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றதைப் போன்று, அதற்கு நிகராக இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

இந்தியாவிலேயே மிக அதிகமான 400 கோடி ரூபாய் என்ற பட்ஜட் செலவில், முற்றிலும் 3D தொழிநுட்பத்தில் 2.O திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதியன்று வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2.O 01 2.O 02 2.O 03 2.O 04  2.O 06 2.O 07 2.O 08 2.O 09 2.O 10 2.O 11 2.O 12 2.O 13 2.O 14 2.O 15 2.O 16 2.O 17 2.O 18

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg