Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பையில் பரவிய தீ: போராட்டத்தின் மத்தியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

In இந்தியா
Updated: 05:48 GMT, Oct 27, 2017 | Published: 05:48 GMT, Oct 27, 2017 |
0 Comments
1142
This post was written by : Kemasiya

மும்பை பந்த்ரா புகையிரத நிலையத்தை அண்டிய சேரிப்புறத்தில் ஏற்பட்ட தீ, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகையிரத நிலையத்தை அண்டிய சேரிப்புற வீடுகளில், நேற்று (வியாழக்கிழமை) மாலை ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில், இவ் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் எனைய பாதிப்புக்கள் குறித்து எந்த தகவல்களும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

எனினும், சேரிப்புற வீடுக்கள் மீது தீ ஏற்பட, சமையல் எரிவாயு வெடிப்பே காரணம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வேகமாக பரவிய தீ, பந்த்ரா புகையிரத நிலையம் வரை பரவியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டுவர, 16 தீயணைப்பு வண்டிகள் மற்றும் 12 தண்ணீர்த் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்தினையடுத்து, குறித்த பகுதியில் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு மற்றும் குடிநீர் வசதிகளை அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg