Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வங்கப் புலிகளின் போராட்டம் வீணானது: முதல் ரி-ருவென்ரி போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி

In கிாிக்கட்
Updated: 05:52 GMT, Oct 27, 2017 | Published: 05:51 GMT, Oct 27, 2017 |
0 Comments
1508
This post was written by : Sujitharan

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில் பங்களதேஷ் அணி போராடி தோல்வியடைந்துள்ளது.

கடும் சாவல் கொடுத்த பங்களதேஷ் அணியை வெற்றி கொண்ட தென்னாப்பிரிக்க அணி, இந்த வெற்றியின் மூலம் இரு போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரில் 1-0 என, முன்னிலை வகிக்கின்றது.

இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு ரி-ருவென்ரி தொடரின் முதல்போட்டி நேற்றையதினம் மாங்ஆங் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களைக் குவித்தது. துடுப்பாட்டத்தில் டீ கொக் 59 ஒட்டங்களையும், அதிரடி காட்டிய  டி வில்லியர்ஸ் 49 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

195 என்ற சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடி பங்களாதேஷ் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு சவால் விடுக்கும் வகையில் விளையாடியது.

தென்னாப்பிரிக்க அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்த அவர்கள் 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

தென்னாப்பிரக்க அணியை ஒரு முறை திக்குமுக்காட வைத்த பங்களதேஷ் அணி, 20 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவிக்கொண்டது. துடுப்பாட்டத்தில் சர்கார் 47 ஓட்டங்களையும், செய்புடீன் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg