Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாஜ்மஹாலை இடிக்கும் திட்டம் கைவிடப்பட்டதா?

In இந்தியா
Updated: 06:38 GMT, Oct 27, 2017 | Published: 06:38 GMT, Oct 27, 2017 |
0 Comments
1318
This post was written by : Kemasiya

தாஜ்மஹால் நினைவுச்சின்னம் பெறுமதிமிக்க கற்களால் உருவாக்கப்பட்ட கட்டிடக்கலை, அதனை பாதுகாக்க வேண்டும் என உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உ.பி மாநிலத்தின் முதலமைச்சர் ஆதித்யநாத், நேற்று (வியாழக்கிழமை) தாஜ்மஹாலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது, அங்கு தூய்மை பணிகளை மேற்கொண்டிருந்த அவர், பின்னர் கூடியிருந்த மக்களிடம் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

“தாஜ்மஹால் இந்திய தொழிலாளர்களின் இரத்தம் மற்றும் வியர்வையினால் கட்டப்பட்டது. அதனை மக்கள் பாதுகாக்க வேண்டும்.

அத்துடன் முகலாய பேரரசர் ஷாஜகான் மற்றும் அவரது ராணி மும்தாஜ் மஹாலுக்கு அஞ்சலி செலுத்திய அவர். மும்தாஜ் மீதான ஷாஜகானின் அன்பை எண்ணி பெருமையடைகின்றேன்,” என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மையில் சுற்றுலாத்துறை பட்டியலில் இருந்து தாஜ்மஹாலின் பெயரை நீக்குவதாகவும், ஒரு சிவன் கோவில் இருந்த இடத்தை வன்முறையாக பறித்து, ஆலயத்தை இடித்து, தாஜ்மஹால் கட்டப்பட்டதாகவும், யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த கருத்தினால், பல்வேறு தரப்பினராலும் அவர் விமர்சிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், தனக்கு எதிரான சர்ச்சைகளை குறைக்கவும், ஏற்கனவே தான் தாஜ்மஹாலை சுற்றுலாத்துறை பட்டியலில் இருந்த நீக்கியமை மற்றும் தாஜ்மஹாலை இடிக்க வேண்டும் என கூறிய விடயங்களை மறைக்கவுமே, அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் என, மீண்டும் அதித்யநாத் விமர்சிக்கப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg