Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிறீஸிலுள்ள குடியேற்றவாசிகள் உளநோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் அபாயம்

In
Updated: 06:33 GMT, Oct 27, 2017 | Published: 06:33 GMT, Oct 27, 2017 |
0 Comments
1462
This post was written by : Suganthini

கிறீஸ் தீவிலுள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடியேற்றவாசிகளில் பலர், உளநோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

குடியேற்றவாசிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் கிறீஸ் அரசாங்கத்துக்கு, மனித உரிமை அமைப்புகள் இந்த வாரம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தஞ்சம் கோரியுள்ள  குடியேற்றவாசிகள் பலர், கிறீஸ் தீவிலுள்ள அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களிலுள்ள பலர் தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவதுடன், போதியளவான மருத்துவ வசதியின்மையையும் எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இந்த முகாம்களில் அவ்வப்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்டவற்றால் இவர்களில் பலர் உளநோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, இவர்களைக் குணப்படுத்துவதற்கு அவசர உதவி தேவைப்படுவதாகவும் இதற்கு உதவுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்.

அத்துடன், முகாம்களில் குடியேற்றவாசிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால், கைதிகள் போன்ற மனநிலையை அவர்கள்  உணர்வதாகவும் இவர்களை வெளியில் நடமாடுவதற்கு அனுமதிக்குமாறும் கோருகின்றோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg