Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயா மரணம் குறித்த விசாரணைத் திகதி அறிவிப்பு!

In இந்தியா
Published: 07:11 GMT, Oct 27, 2017 |
0 Comments
1287
This post was written by : Kemasiya
gfhftghdgbd

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை, எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக, நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.

விசாரணைக்காக ஒதுக்கப்பட்ட ‘சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கல்சா மகாலில்’, கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி விசாரணை இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறித்த விசாரணை இடம்பெறாத நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய ஆறுமுகசாமி, விசாரணைத் திகதியை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

விசாரணையில் வெளிப்படைத்தன்மை இருக்கும். ஊடகங்கள் ஒத்துழைத்தால் விசாரணையை உரிய காலத்தில் முடிக்க முடியும். அத்துடன் இந்த விசாரணைக்காக அரசு ஒரு கால அளவினை ஒதுக்கியுள்ளது. அதற்குள் முடிக்க வேண்டும்.

மேலும் ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்களை வழங்க விரும்புவோர், நேரில் ஆஜராகியோ அல்லது பதிவு தாபால் மூலமோ அளிக்கலாம்.

ஆனால் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதிக்குள் தகவல்களை வழங்க வேண்டும். விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg