Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

WTA: தோல்வியின் வலியோடு அரையிறுதியில் பிளிஸ்கோவா

In டெனிஸ்
Updated: 07:21 GMT, Oct 27, 2017 | Published: 07:21 GMT, Oct 27, 2017 |
0 Comments
1206
This post was written by : Sujitharan

உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில், பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான லாத்விய வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ, ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற ”வய்ட்” பிரிவின் குழுநிலைப் போட்டியில், செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை (PLISKOVA) வெற்றி கொண்ட இவர், வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்த போட்டியில் தோல்வியடைந்த போதிலும், கரோலினா பிளிஸ்கோவா அரைறிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றது.

”வய்ட்” பிரிவின் இறுதி குழுநிலைப் போட்டிகள் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றன. இதில் ஒரு போட்டியில் லாத்விய வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ (JELENA OSTAPENKO), செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை (PLISKOVA) எதிர்கொண்டார்.

இந்த போட்டியில், ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

முன்னதாக நடைபெற்ற இரண்டு குழுநிலைப் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த  கரோலினா பிளிஸ்கோவா, ஏற்கனவே அரையிறுதிச் சுற்றுக் முன்னேறியிருந்த நிலையில், இந்த போட்டியில் தோல்வியடைந்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg