Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: நவம்பர் முதலாம் திகதி வர்த்தமானி!

In இலங்கை
Updated: 09:45 GMT, Oct 27, 2017 | Published: 07:38 GMT, Oct 27, 2017 |
0 Comments
1200
This post was written by : Varshini

இலங்கையின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று (வெள்ளிக்கிழமை) இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.

சுமார் இரண்டு வருட காலமாக இழுபறியில் காணப்படும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை, எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றாற்போல் இவ் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும்.

வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர், தேர்தலை நடத்துவதற்காக ஆயத்தங்களை மேற்கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg