Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போன ரஷ்ய ஹெலிகொப்டரை தேடும் நடவடிக்கை

In
Updated: 07:59 GMT, Oct 27, 2017 | Published: 07:59 GMT, Oct 27, 2017 |
0 Comments
1172
This post was written by : Suganthini

ரஷ்யாவுக்குச் சொந்தமான ஹெலிகொப்டரொன்று காணாமல் போன நிலையில், அதனைத் தேடும் நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 பயணிகள் மற்றும் 5 விமானிகளுடன் நேற்று (வியாழக்கிழமை) பயணித்த ஹெலிகொப்டர், நோர்வேயின் தீவுக்கூட்டங்களில் ஒன்றான சுவல்பார்டு தீவில் திடீரெனக் காணாமல் போயுள்ளது.

இரண்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் படகுகளின் உதவியுடன் காணாமல் போயுள்ள ஹெலிகொப்டரை தேடி வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தக் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானமை தொடர்பில் எந்தவித தடயங்களும் தென்படவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg