Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவுதிக்கு ஆயுத விற்பனை: விமர்சிப்பதை நிறுத்தவும்

In
Updated: 08:23 GMT, Oct 27, 2017 | Published: 08:23 GMT, Oct 27, 2017 |
0 Comments
1265
This post was written by : Suganthini

சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என, பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சர் மைக்கேல் பஃலூன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக் குழுவினர் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சவுதி அரேபியாவுக்கு எம்மால் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த ஆயுத விற்பனை தொடர்பான விமர்சனத்தை அவர்கள் கைவிட வேண்டும்’ என்றார்.

‘ஏனெனில், சவுதி அரேபியாவுக்கான ஆயுத விற்பனை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளமையால், எமது வர்த்தக நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg