தொழிற் கட்சிக்கு புதிய தலைவர்: வாக்குப்பதிவு ஆரம்பம்
In
Updated: 08:46 GMT, Oct 27, 2017 | Published: 08:46 GMT, Oct 27, 2017 |
0 Comments
1234
This post was written by : Suganthini

ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சியில் புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சியின் தலைவராக இதுவரைகாலமும் பதவி வகித்துவந்த Kezia Dugdale, கடந்த ஓகஸ்ட் மாதம் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவிக்கு இருவர் போட்டியிடுகின்றனர்.
இதற்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் மறுநாள் வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.