Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

In இலங்கை
Updated: 09:44 GMT, Oct 27, 2017 | Published: 09:23 GMT, Oct 27, 2017 |
0 Comments
1180
This post was written by : Anojkiyan

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சதொச ஊழியர்கள் சிலரை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு சுமார் 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2010, 2014ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் 150 ஊழியர்களின் உத்தியோகபூர்வ வேலைக்கு பதிலாக அவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமைக்காவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg