Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் பொது வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்!

In இலங்கை
Updated: 09:28 GMT, Oct 27, 2017 | Published: 09:28 GMT, Oct 27, 2017 |
0 Comments
1175
This post was written by : Vithushagan

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில்  திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக வடமாகாண சுகாதார அமைச்சருக்கு, பாதீக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்தே அமைச்சர் அங்கு சென்று வெளி நோயாளர் பிரிவை பார்வையிட்டதோடு,வைத்தியர்களுடன் கலந்துரையாடினார்.

அதனைத்தொடர்ந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பொது பிணி ஆய்வு மையம்(கிளினிக்) இடம் பெறும் இடத்திற்குச் சென்று கிளினிக்கிற்காக வரும் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.

இதன் போது அங்கு இடம் பெற்று வரும் சில தவறுகள் அமைச்சரினால் சுட்டிக்காட்டப்பட்டதோடு, சிகிச்சைக்காக வரும் மக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காது அவர்களுக்கான சேவையினை துரிதப்படுத்தி அனுப்பி வைக்க வைத்தியசாலை பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திருமதி அன்ரன் சிசில்,மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0014

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg