Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன – தென்கொரியா

In உலகம்
Updated: 09:29 GMT, Oct 27, 2017 | Published: 09:29 GMT, Oct 27, 2017 |
0 Comments
1360
This post was written by : Suganthini

வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன என, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) அங்கு சென்றுள்ள அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மாட்டிஸுக்கும் தென்கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ‘அண்மைக்காலமாக கொரிய தீபகற்பம் மீது  ஆத்திரமூட்டும்  நடவடிக்கைகளை வடகொரியா முன்னெடுத்து வந்திருந்தன. இருப்பினும், வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளை, அமெரிக்காவால் முன்னெடுக்கப்பட்டுவந்த நடவடிக்கைகள் கட்டுப்படுத்தியுள்ளன” என்றார்.

இதேவேளை, ‘வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தென்கொரியாவைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. எனவே, தென்கொரியாவை அமெரிக்கா தொடர்ந்து பாதுகாக்கும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg