Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் உயிரை மாய்த்து கொண்ட தாய் கண்ணீருடன் உருக்கமான கடிதம்! (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 09:43 GMT, Oct 27, 2017 | Published: 09:43 GMT, Oct 27, 2017 |
0 Comments
1318
This post was written by : Anojkiyan

யாழ்ப்பாணம் அரியாலையில் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொண்ட தாய், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் தனது குடும்பத்தினருக்கு இரு உருக்கமான கடிதங்களை எழுதி வைத்துள்ளார்.

தனது உயிரை மாய்த்து கொள்ள முதல், அவர் எழுதிய கடிதங்கள் தற்போது ஊடகங்களிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், “எனது கணவர் கடன் கொடுத்து ஏமார்ந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். அவர் இல்லாதா வாழ்க்கையை வாழ முடியவில்லை. பிள்ளைகளுக்காக வாழலாம் என நினைத்தால், அப்பா எப்ப வருவார்? அப்பா கண் துறந்துட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை? போன்ற கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை.

எனது கணவரின் தற்கொலைக்கு ஸ்ரீசங்கர் அவர் மனைவி சுகன்ஜா மற்றும் ஸ்ரீசங்கரின் தம்பி ஸ்ரீதரன் ஆகியோரே காரணம் தவறு செய்பவனை விட தவறு செய்ய தூண்டுபவனே குற்றவாளி என்பது போல நாங்கள் இந்த நிலைக்கு வர இவர்களே காரணம்.

உயிரை விட மேலானது எதுவுமில்லை எங்கள் பக்க நியாயத்தை நிரூபிக்க, கடவுள் ஒரு சிலரையே சத்தியத்தை காப்பாற்ற இந்த பூவுலகத்தில் படைத்துள்ளார். அந்த வகையில் நாங்கள் உங்களை நினைக்கின்றோம். இந்த வழக்கை தங்களின் பார்வையின் கீழ் எடுத்து நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் பிறந்தவர்கள் யாவரும் இறப்பவர்களே. ஒன்றை மட்டும் நினைத்து ஆறுதல்படுத்துங்கள். உங்கள் பிள்ளையின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி உள்ளீர்கள். என் புருஷன் தந்த வாழ்வும் நிறைவானதே.

நாங்கள் குடும்பமாக நீடித்த காலம் வாழ ஆசைப்பட்டோம். இறுதி வரை அதற்காக போராடினோம். முடியவில்லை. போகின்றோம். என்னுடையதும் என் பிள்ளைகளினதும், இறுதி சடங்கை என் வீட்டார் நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் என் கணவன் வீட்டு பகுதிக்கு கொடுக்க வேண்டாம். இதுவே என் விருப்பம். எம் மரண வீட்டை மிகவும் எளிமையாக மேளம் போஸ்மார்ட்டம் இல்லாமல் உடனடியாக எடுக்கவும்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குடும்ப தலைவரான கணவன் கிருஷாந்தன் தனது குடும்ப நண்பர் ஒருவரிடம் ஒரு கோடியே 17 இலட்ச ரூபாய் பணத்தினை கடனாக கொடுத்துள்ளார். அக் கடன் தொகையை நண்பர் கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில் பெருமளவான கடன் கொடுத்த காரணத்தால் கணவன் பூர்விக சொத்துக்கள் சிலவற்றை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
தனது நண்பனுக்கு கடன் கொடுக்கும் போது சாட்சியமாக நண்பனின் மனைவி மற்றும் நண்பனின் தம்பி ஆகியோர் நின்று இருந்தனர். கடன் எந்த விதமான பொறுப்புக்களும் இல்லாமல் நட்பின் அடிப்படையில், நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது.

கடனை ஆறு மாத காலத்திற்கு பின்னர் திருப்பி கேட்ட போது, காசோலையை வழங்கியுள்ளார். குறித்த காசோலையை வங்கியில் வைப்பு செய்ய போது, வங்கியில் பணம் இல்லாமல் அது திரும்பியுள்ளது.
அதன் பின்னர் கடனை கேட்க நண்பன், நண்பனின் மனைவி மற்றும் நண்பனின் தம்பியிடம் சென்ற போது வாங்கிய கடனை கொடுக்காது ஏமாற்றியதுடன் முடிந்தால் பணத்தினை வாங்கி பார் என சவால் விட்டுள்ளனர். அத்துடன் தம்பியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

அதன் பின்னர் கடன் தொகை திருப்பி தராது ஏமாற்றியமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் பின்னர் பத்து இலட்ச ரூபாய் பணத்தினை சிறிது சிறிதாக கடனை பெற்றவர் கொடுத்துள்ளார். மிகுதி பணம் கொடுக்கவில்லை.  இந்நிலையில் கடந்த ஒகஸ்ட் 30ஆம் திகதி வழக்குக்காக நீதிமன்றுக்கு சென்று வந்த பின்னர் மறுநாள் 31ஆம் திகதி குடும்பத்துடன் உயிரை மாய்த்து கொள்வதற்கு முயற்சித்துள்ளார்கள்.

முதலில் கணவன் மருந்தை குடித்துள்ளார். அவர் மருந்தை குடித்து அவஸ்தைப்பட்டத்தை பொறுக்க முடியாத மனைவி தானும் மருந்தை அருந்தாது தனது பிள்ளைகளுக்கும் மருந்தை அருந்த கொடுக்காது கணவனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக கணவனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்று அவரை காப்பாற்றும் முயற்சித்துள்ளார்.
சிகிச்சை பயனளிக்காத நிலையில் கணவனான இராமன் கிருஷாந்தன் கடந்த மாதம் 03ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இதன் பின்னணிலேயே கடும் மனம் உழைச்சலுக்குள்ளான தாய் மற்றும் குழந்தைகள் இன்று நஞ்சருந்தி உயிரிழந்தனர்.

கடன் தொல்லை: யாழ்ப்பாணத்தில் 3 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை!

யாழ்ப்பாணம் அரியாலையில் தாய் ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

28 வயதுடைய குறித்த தாய், இரண்டு வயதுடைய இரு ஆண் குழந்தைகள் மற்றும் நான்கு வயதுடைய பெண் குழந்தையுடன் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் இரு மாதங்களுக்கு முன்னர் கடன் கொடுத்து திருப்பி கிடைக்காத விரக்தியால் உயிரிழந்தார். இதனால் மனஉழைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே இப்பெண் இவ்விபரீதமான முடிவை எடுத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg