Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கிரிக்கட்டைக் காப்பாற்ற என்னை அப்போதே அழைத்திருக்க வேண்டும்: முரளி ஆதங்கம்!

In கிாிக்கட்
Updated: 09:57 GMT, Oct 27, 2017 | Published: 09:57 GMT, Oct 27, 2017 |
0 Comments
2222
This post was written by : Sujitharan

இலங்கை கிரிக்கட்டை காப்பாற்ற தனது பங்களிப்பு தேவைப்பட்டால் ஆரம்பத்திலேயே தனக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவான், முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ள முரளிதரன், தேசிய சிங்களப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செவ்வியில், ”பின்னடைவை சந்தித்து வரும் இலங்கை கிரிக்கெட்டை மீட்கும் செயற்பாடுகளில், முரளியும் இணைந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களே என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய முரளிதரன், அவ்வாறு சொல்வது மக்கள் தான். ஆனால் தான் அவ்வாறு சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.

தனது பங்களிப்பு தேவைப்பட்டால் ஆரம்பத்திலேயே தனக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்றும், எனினும், தற்போது குழுவொன்று நியமிக்கப்பட்டு  நிர்வாகச் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கிரிக்கெட்டில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வது அவர்களது பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg