Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதலோனியாவில் நேரடி ஆட்சிக்கு அங்கீகரிக்குமாறு வேண்டுகோள்

In
Updated: 09:59 GMT, Oct 27, 2017 | Published: 09:59 GMT, Oct 27, 2017 |
0 Comments
1213
This post was written by : Suganthini

கதலோனியாவில் ஸ்பெய்ன் அரசாங்கத்தால் நேரடி ஆட்சியை முன்னெடுப்பதற்கு அங்கீகாரம் வழங்குமாறு  ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கதலோனிய விவகாரம் தொடர்பில் செனட்டர்கள் மத்தியில் இன்று (வெள்ளிக்கிழமை) விவாதித்தபோதே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கதலோனியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதுடன், அங்கு ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் சட்ட ஒழுங்கு பேணப்பட வேண்டும்.

இந்நிலையில், கதலோனியாவிலுள்ள மக்களைப் பாதுகாப்பதற்காக ஸ்பெய்னின் கட்டுப்பாட்டுக்குள் கதலோனியாவைக் கொண்டுவர நாம் எண்ணியுள்ளோம். இதற்கான அங்கீகாரத்தை செனட்டர்கள் வழங்க வேண்டும் என்று நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். ‘ என்றார்.

இதேவேளை, ‘கதலோனியத் தலைவர், அதன் துணைப் தலைவர் மற்றும் அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்குவதற்கும் நாம் எண்ணியுள்ளோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg