Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் பொருளாதாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக ராகுல் கேலி

In இந்தியா
Updated: 10:13 GMT, Oct 27, 2017 | Published: 10:09 GMT, Oct 27, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Kemasiya
201704301801266810_Rahul-Gandhi-is-Congress-leader-in-October-month-advice-with_SECVPF

‘வைத்தியர் அருண்ஜெட்லி’, பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. வரி ஆகிய நடவடிக்கைகள், நாட்டின் பொருளாதாரத்தை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தள்ளிவிட்டது என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி தொடர்பில், காங்கிரஸ் கட்சிக்கும் ஆளும் பா.ஜ.க. இடையில் கடும் வாதம் இடம்பெற்றுவரும் நிலையில், ராகுல்காந்தி இன்றைய (வெள்ளிக்கிழமை) தனது டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனது பதிவில் மேலும் தெரிவித்திருந்த ராகுல்காந்தி,

‘நான் யாருக்கும் சளைத்தவன் இல்லை என’ நீங்கள் கூறினீர்கள். ஆனால் உங்களுடைய மருந்து சரியாக வேலை செய்யவில்லை, என பதிவிட்டுள்ளார்.

குஜராத் தேர்தல் நெருங்குகின்ற நிலையில் பா.ஜ.க.இணை தொடர்ந்தும் விமர்சிக்கும் ராகுல்காந்தி சில நாட்களுக்கு முன்னர் மோடியை கேலி செய்து வந்தார். இந் நிலையில் இன்றைய தனது டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு கேலி செய்து பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg