Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியர்களுக்கான உணவு விநியோகத்துக்கு மீண்டும் அனுமதி

In உலகம்
Published: 10:14 GMT, Oct 27, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Suganthini
world

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு, உணவு விநியோகத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஐ.நா.வால் முன்னெடுக்கப்பட்டுவந்த உணவு விநியோகத்திட்டம் கடந்த இரு மாதங்களாக மியன்மார் அதிகாரிகளால் நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கான அனுமதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக உலக உணவுத்திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மியன்மார் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் உலக உணவுத்திட்டம் கூறியுள்ளது.

ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் இடம்பெற்றுவரும் வன்முறை காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் பலர் அயல் நாடான பங்களாதேஷுக்கும்  தப்பிச்சென்றுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg