Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத்தில் கலவரம்: பொலிஸ்-பொதுமக்கள் மோதலில் விவசாயி உயிரிழப்பு

In இந்தியா
Published: 10:39 GMT, Oct 27, 2017 |
0 Comments
1272
icon_com
This post was written by : Kemasiya
201710271423365046_Interrogation-death-sets-off-protest-farmer-dies-in-Gujarat_SECVPF

குஜராத்தில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில், விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளமை அந்தப் பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

குஜராத் மாநில பொலிஸ் நிலையத்தின் முன்பு, இன்று (வெள்ளிக்கிழமை) பிரேதம் ஒன்றுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பொலிஸார் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்திய வேளை, பதிலுக்கு பொலிஸாரும் தூப்பாக்கி சூடு நடத்தியதில், குறித்த விவசாயி உயிரிழந்துள்ளார்.

குஜராத் மாநிலம் டாகோட் மாவட்டத்தின், கிடகோட்டா என்ற பழங்கிராமத்தை சேர்ந்த கணேஷ் கமாரா (வயது-31) என்பவரை, திருட்டு வழக்கில் கைது செய்த பொலிஸார், காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக அடித்துள்ளனர். அதன் பின்னர், இன்று காலை 3.30 மணியளவில் அவரை விடுதலை செய்துள்ளனர்.

இந் நிலையில், விடுதலை செய்யப்பட்டு சிறிது நேரத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இதனை கண்டிக்கும் வகையில் கோபமடைந்த மக்கள், இறந்த நபரின் பிரேதத்துடன் பொலிஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டபோதே, மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg