Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களின் கருத்துக்களுக்கு பின்னரே அரசியலமைப்பு திருத்த சட்டம்!

In இலங்கை
Updated: 10:38 GMT, Oct 27, 2017 | Published: 10:37 GMT, Oct 27, 2017 |
0 Comments
1232
This post was written by : Anojkiyan
sri-lanka2

புதிய அரசியல் அமைப்பு குறித்து பொது மக்கள் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை முன்வைத்ததன் பின்னரே புதிய அரசியல் அமைப்பு திருத்த சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற சிவில் அமைப்புக்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.

எதிர்வரும் 30 ஆம் 31ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் குறித்த அரசியலமைப்பு சட்டம் குறித்து இடம்பெறவுள்ள நாடாளுமன்ற விவாதத்தினை தொடர்ந்து, பொது மக்கள் மீண்டும் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை முன்வைக்க முடியும் என பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு திருத்த சட்ட நடவடிக்கைகளின் போது தாமும் நடுநிலையாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg