Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதலோனிய நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் – ஜேர்மன்

In ஐரோப்பா
Published: 10:38 GMT, Oct 27, 2017 |
0 Comments
1217
This post was written by : Suganthini
spain

கதலோனியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு, கதலோனிய அதிகாரிகளும் ஸ்பெய்ன் அரசாங்கமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என, ஜேர்மனி தெரிவித்துள்ளது.

பேர்லினில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, ஜேர்மனிய அரசாங்கப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘ஸ்பெய்னிலிருந்து சுதந்திரம் கோரியுள்ள கதலோனியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதுடன், கதலோனியாவில்; சுமூகமான நிலைமை ஏற்பட வேண்டும்.

இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கதலோனிய அதிகாரிகளும் ஸ்பெய்ன் அதிகாரிகளும் சுமூகமான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், இதன் மூலம் இரு தரப்பினர்களும் இணக்கப்பாடொன்றை எட்டுவார்கள் என்று நாம் நம்புகின்றோம்’ என்றார்.

மேலும், ‘கதலோனியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக ஸ்பெய்ன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் எமது பூரண ஆதரவு வழங்குவோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg