Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமல் கட்சியின் பதவியை தூக்கியெறிந்தார் பியசிறி!

In இலங்கை
Updated: 10:53 GMT, Oct 27, 2017 | Published: 10:53 GMT, Oct 27, 2017 |
0 Comments
1245
This post was written by : Anojkiyan

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ஐ.தே.கட்சியுடன் இணைந்து செயற்பட போவதில்லை. தன்னை தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்க தேசிய சுதந்திர முன்னணி நடவடிக்கைகளை மேற்கொண்டது. எனினும், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட கூட்டத்தில் தானும் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியன்ஜித் விதாரணவும் கலந்து கொள்ளவில்லை.

நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக கூடும் போது அதிலிருந்து விலக தேசிய சுதந்திர கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அதற்கு தான் உடன்படவில்லை. இதேவேளை, புதிய அரசிலமைப்பின் ஊடாக நாட்டை பிரிக்கும் விடயத்தை தோற்கடிக்க வேண்டுமாயின், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் மற்றும் ஜனாதிபதியிடமும் கலந்துரையாட வேண்டும். எவ்வாறாயினும், அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg