பாகிஸ்தானைப் பழி தீர்க்குமா இலங்கை?
In கிாிக்கட்
Updated: 10:48 GMT, Oct 27, 2017 | Published: 10:48 GMT, Oct 27, 2017 |
0 Comments
1744
This post was written by : Sujitharan

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-ருவென்ரி போட்டி இன்று அபுதாபியில் நடைபெறவுள்ளது.
இரவுப் போட்டியாக நடைபெறும் இந்த போட்டி, இலங்கை இரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கிய போட்டியாக அமையவுள்ளது.
தொடரைக் கைப்பற்ற வெற்றியை எதிர்ப்பார்த்து பாகிஸ்தான் அணியும், தொடரை இழக்காமல் இருக்க கட்டாய வெற்றியை எதிர்ப்பார்த்து இலங்கை அணியும், இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ளன.