Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் 11 பேர் கைது

In
Published: 11:02 GMT, Oct 27, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Suganthini
uk

பிரித்தானியாவுக்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் 11 பேரைக் கைதுசெய்துள்ளதாக குடிவரத்துத்துறை திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹலிபக்ஸ் எனப் பெயரிடப்பட்டு அண்மையில் முன்னெடுப்பட்ட இந்தத் தேடுதல் நடவடிக்கையில், உட்துறை அமைச்சு அலுவலகத்தைச் சேர்ந்த சுமார் 200 அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்போது, 11 சந்தேக நபர்களை இவர்கள் கைதுசெய்துள்ளதாகவும் குடிவரத்துறை திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விசேடமாக  வடிவமைக்கப்பட்ட வான் மற்றும் டிரக் போன்ற வாகனங்களுக்குள் ஆட்களை ரகசியமாக மறைத்துவைத்து கடத்தல் செயற்பாட்டில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளதாகவும்  இவர்களால் ஆப்கானிஸ்தான், வியட்நாம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே பிரித்தானியாவுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

மேலும், மனிதக் கடத்தல் நடவடிக்கையானது, ஆபத்தான  பாரிய வர்த்தக நடவடிக்கை என, குற்றவியல் மற்றும் நிதி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg