Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொண்டமானின் பெயர் நீக்கம்: பொகவந்தலாவ மக்கள் எதிர்ப்பு!

In இலங்கை
Updated: 11:12 GMT, Oct 27, 2017 | Published: 11:12 GMT, Oct 27, 2017 |
0 Comments
1197
This post was written by : Vithushagan

ட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து பொகவந்தலாவ நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் முன்னெடுத்தனர்.

ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம் பூல்பேங் தொழில் பயிற்சி நிலையமாக பெயர்மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலும், தொண்டமான் தொழில் பயிற்சி நிலையம் என்ற பெயரை மாற்றியமைத்த அமைச்சுக்கு எதிர்ப்புகாட்டியும் இந்த ஆர்ப்பாட்டம் கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தி முன்னெடுக்கப்பட்டது.

மலையகத்தின் மூத்த தலைவர் மட்டுமின்றி மலையகத்தின் தந்தை என போற்றப்பட்டவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான்.

மலையக மக்கள் இன்று தலை நிமிர்ந்து வாழக்கூடிய வகையில் பிரஜாஉரிமை உள்ளிட்ட கல்வி தொழில் வாய்ப்பு என எண்ணிலடங்காத சேவையை ஆற்றியவர்.

இவரின் மாபெரும் சேவையை பாராட்டி அவருக்காக பழைய நாடாளுமன்ற பகுதியில் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மலையக மக்களினால் போற்றப்பட்டு வந்த இவரின் உருவப்படம் மற்றும் பெயர் அடங்கிய தொழில் பயிற்சி நிலையத்தை பெயர் மாற்றியமைக்கப்பட்டு அந் நிலையத்திலிருந்து இவரின் உருவப்படத்தையும் அகற்றப்பட்டமை மலையக மக்களை அரசியல் நோக்கத்திற்காக ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் தலைகுனிய வைக்கும் செயலாகும்.

எனவே இந்த பயிற்சி நிலையத்திற்கு பொறுப்பான அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கையை வன்மையாக கண்டித்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்பாட்டகாரர்கள் கருத்து தெரிவித்தனர்.

சுமார் 1 மணித்தியாலயங்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினால் பிரதான வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்ததோடு, பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சக்திவேல், பிலிப்குமார், கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

DSC020903DSC02137 DSC02146

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg