Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 6 பேர் படுகாயம்

In உலகம்
Updated: 12:15 GMT, Oct 27, 2017 | Published: 12:15 GMT, Oct 27, 2017 |
0 Comments
1139
This post was written by : Suganthini

தென்கிழக்குப் பாகிஸ்தானில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாகூரிலுள்ள ரயில் தண்டவாளத்திலேயே இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதுடன், இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்ற வேளையில் பலூசிஸ்தான், குவெட்டா நகரிலிருந்து புறப்பட்டுவந்த ரயிலொன்று தரித்து நின்றுள்ளது.

இந்தக் குண்டு வெடிப்பில் சிக்கி 6 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், ரயில் பெட்டிகளும் சேதமடைந்துள்ளன.

இதனை அடுத்து, குவெட்டா நகருக்கான அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg