Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை கிரிக்கட் சபை எங்களை ஏற்றுக் கொள்ளாது – முரளி வேதனை

In கிாிக்கட்
Published: 12:27 GMT, Oct 27, 2017 |
0 Comments
1586
icon_com
This post was written by : Sujitharan
muttiah-muralitharan

தங்களைப் போன்ற முன்னாள் நட்சத்திர வீரர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், கிரிக்கட் சபைத் தேர்தலில் வெற்றி பெற முடியது என, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவான், முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை தன்னகத்தே கொண்டுள்ள முரளிதரன், தேசிய சிங்களப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செவ்வியில், உங்களைப் போன்ற  உலகை வென்ற வீரர்களுக்கு, இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றப்  பாதையில்  கொண்டு  செல்வதற்கான  சூழல் இந்நாட்டில் இல்லையா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய முரளிதரன், இந்த நாட்டு மக்கள், கிரிக்கட் வீரர்களை நேசிப்பதாகவும், வீரர்கள்  பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டினாலும், 160 கிரிக்கெட் சங்கங்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக, கிரிக்கட் சபைத் தேர்தலில் போட்டியிட்டால், அதில் 3 வாக்குகளை பெறுவது கூட சந்தேகம்தான் என்றும் கூறினார்.

கிரிக்கட்டை வளர்க்க கிரிக்கட் சபைக்கு செல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று சுட்டிக்காட்டிய முரளிதரன், தம்மால் முடிந்த எந்தவொரு உதவியையும் செய்ய முடியும் என்றும் கூறினார்.

அதைவிடுத்து கிரிக்கெட்டுக்கு உதவி செய்யும் நோக்கில் நிர்வாகத்துக்கு செல்லவேண்டிய அவசியம் ஒருபோதும் கிடையாது. உதவி நினைப்பவர்கள் எங்கிருந்தாலும் உதவி செய்வார்கள் என்பததே தனது நிலைப்பாடு என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg