Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குழப்பங்களை ஏற்படுத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்: பொலிஸார் அறிவிப்பு!

In இலங்கை
Published: 13:41 GMT, Oct 27, 2017 |
0 Comments
1710
This post was written by : Vithushagan

வாழைச்சேனை பகுதியில் புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பேருந்து தரிப்பிடத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன்யட்டவர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான வழக்கினை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் தாக்கல்செய்யுமாறும், அதுவரையில் பேருந்து நிலையத்திற்கு சேதங்களை ஏற்படுத்த முனைந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் இருக்குழுக்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குறித்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் எந்தவித செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டாம். அவ்வாறு செயற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்.

எதிர்வரும் திங்கட்கிழமை இந்த பிரச்சினையை நீதிமன்றுக்கு கொண்டுசென்று தீர்வுகாணப்படும். அதன் பிறகு அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அந்த பகுதியில் இயல்புநிலை ஏற்படும் வரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

01 03 04

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg