Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுகாதாரத்துறையை மேம்படுத்த உலக வங்கி நிதி உதவி!

In இலங்கை
Updated: 15:46 GMT, Oct 27, 2017 | Published: 15:45 GMT, Oct 27, 2017 |
0 Comments
1271
This post was written by : Vithushagan

இலங்கையில் ஆரம்ப சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக உலக வங்கி ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர்  ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உலகவங்கியின் பிரதிநிதிகளுடன் சுகாதார அமைச்சில்  சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரதவுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது ஆரம்ப சுகாதார திட்டங்களை தேசிய மட்டத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்க்பபட்டுள்ளது. இதற்காக சுமார் 200 மில்லியன் ரூபா வழங்குவதற்கு உலகவங்கி தயாராகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்காக உலக வங்கி கடந்த சில வருடங்களாக சுகாதார அமைச்சிற்கு நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி மூலமான திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இந்த திட்டங்கள் தொடர்பில் உலகவங்கி அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg