Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!

In இலங்கை
Updated: 16:58 GMT, Oct 27, 2017 | Published: 16:58 GMT, Oct 27, 2017 |
0 Comments
1209
This post was written by : Vithushagan

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு,இந்து மதவிவகார அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாளேந்திரன் மற்றும்  ஆன்மீக அதிதியாக இராமகிருஸ்ணமிஷன் தலைவர் சுவாமி பிரபு பிரபானந்தஜி மகராஜீம் கலந்துகொண்டனர்.

இதன்போது சாதாரண தரம்,ஐந்தாம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை,உயர்தரம் ஆகியவற்றில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் தேசிய,மாகாண ரீதியில் விளையாட்டு உட்பட இணைப்பாட விதானங்கள் மற்றும் போட்டிகளில் சாதணைகள் படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலையினை சிறந்த முறையில் கொண்டுசெல்லும் அதிபர் ஆசிரியர்களும் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.



DSC07221 DSC07244 DSC07288

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg